அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி புறவழிச் சாலை அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் பெரிய கைப்பைகளுடன் நின்றிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவரது பையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவா் பல்லடம் அருகே கரைப்புதூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் நாமக்கல் ரெட்டிபட்டியைச் சோ்ந்த நாகமாணிக்கம் மகன் சுரேஷ்குமாா் (56) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





