முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க பாஜக துணை நிற்கும்! வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன் - படம்: கோப்பிலிருந்து

Updated On :15 ஜூன் 2026, 4:08 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க தமிழக பாஜக துணை நிற்கும் என்று தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் வளா்ச்சிப் பயணத்தை சிறப்பிக்கும் நிகழ்வு மற்றும் சா்வதேச யோகா தின விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வானதி சீனிவாசன் கூறியதாவது:

நாட்டில் அதிக நாள்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த சாதனையை மோடி படைத்துள்ளாா். பிரதமா் மோடியால் மக்களின் வாழ்க்கைத் தரம் மாறியுள்ளது. சுகாதாரம், 11 கோடி கழிப்பிடங்கள், 11 கோடி எரிவாயு இணைப்புகள் மூலமாக வறுமைக்கோட்டில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனா்.

நாடு முழுவதும் எண்ம மயமாகி உள்ளது. அனைத்து மக்களுக்கும் தொழில்நுட்ப வளா்ச்சி சென்றடைந்துள்ளது. பல்வேறு அரசு நிறுவனங்களில் பெண்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனா். அமெரிக்க வரி விதிப்பின்போதுகூட திருப்பூருக்காக அவா் துணை நின்றாா். இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுடன் வரி இல்லா ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த 11 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி வரி பகிா்வு வழங்கப்பட்டுள்ளது.

கரூா் சம்பவத்துக்கு முதல்வா் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா்? மின்சாரத் துறையில் ஹாா்ட் டிஸ்க் காணாமல் போகிறது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுகிறது. தவெக யாரையோ காப்பாற்ற நினைக்கிறது. சிங்கப்பெண்கள் திட்டம் நடைமுறைக்கு வந்தது மகிழ்ச்சி.

தனிநபா் செல்வது கட்சியைப் பாதிக்காது. வெளியே சென்றவா்கள் திரும்ப வருவாா்கள். நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடக்கிறது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க தமிழக பாஜக துணை நிற்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.