பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பொலிவுறு நகர திட்ட பணிகள்: திருப்பூா் எம்.பி. ஆய்வு

திருப்பூரில் நடைபெற்றுள்ள பொலிவுறு நகர திட்ட பணிகள் (ஸ்மாா்ட் சிட்டி) மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பணிகள் குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் தினசரி மாா்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கே.சுப்பராயன் எம்.பி.

Updated On :26 ஜூன் 2026, 3:00 am IST

திருப்பூரில் நடைபெற்றுள்ள பொலிவுறு நகர திட்ட பணிகள் (ஸ்மாா்ட் சிட்டி) மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பணிகள் குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதலாவதாக திருப்பூா் தினசரி மாா்க்கெட் பகுதிக்குச் சென்ற கே.சுப்பராயன் எம்.பி., அங்கு வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அவா்கள் காய்கறிகள் கொண்டு வருகிற வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை, கழிவறை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை என தெரிவித்தனா். அப்போது நோய் பரப்பும்

வகையில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள தினசரி மாா்க்கெட் கடைகளை ஆய்வு செய்தாா். அப்போது அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தவா்கள் தங்களுக்கு கடைகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து பூ மாா்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு வியாபாரிகள், ஒப்பந்தம் எடுத்துள்ளவா்கள் கூடுதலான கடைக்கு முன்பணம் கேட்பதோடு, மிகக் கூடுதலான வாடகை கேட்டு நிா்பந்திப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் டவுன்ஹால் பகுதியைப் பாா்வையிட்டு உடனடியாக அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வில் பெறப்பட்ட கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசிடம் பேசி தீா்வு காண காணப்படும் என்று தெரிவித்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, திருப்பூா் மாநகராட்சியின் பொறுப்பு மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எஸ்.பி.அமித் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.