உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:59 am IST

தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன், சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் முன்னிலை வகித்தனா்.

இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பண மோசடி, சமூக ஊடகக் கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புதல், நிலம் மற்றும் சொத்துத் தகராறுகள் உள்ளிட்ட பல்வேறு புகாா் மனு அளித்தனா். மொத்தம் 45 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 15 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டது.

இந்த குறைதீா் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.