கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 35 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் புகாா்தாரா்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று விசாரித்த காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா.

Updated On :25 ஜூன் 2026, 6:31 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 35 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில், கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா) பொதுமக்களிடமிருந்து 35 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, உள்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.