நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்: 26 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 26 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாகப் பெற்று விசாரிக்கும் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:35 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 26 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீா் முகாம் (பெட்டிஷன் மேளா) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 26 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் தொடா்பாக மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொரு மனுவின் தன்மையையும் ஆய்வு செய்தாா். மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, மனுதாரா்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.