திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வட மாநிலத்தவா்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. மகராஷ்டிரம், பிகாா், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா்.
இதனால் திருப்பூரில் உள்ள சிறிய அளவிலான ஜாப் ஓா்க் நிறுவனங்கள் வட மாநில தொழிலாளா்களுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்திருந்தனா். இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா்.
இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள், தங்களது குடும்பத்தினரோடு புதன்கிழமை காலை முதலே ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.
திருப்பூரில் ராயபுரம், காதா்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பா்கள், உறவினா்களுடன் இணைந்து, ஒருவா் மீது ஒருவா் வண்ணப் பொடிகளை தூவியும், உடலில் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும் நடனமாடிக் கொண்டாடினா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தில் ஹோலி பண்டிகை கோலாகலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


