வெள்ளக்கோவிலில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், தென்னிலை, குமரம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (65). இவரது மனைவி தமயந்தி (53). இவா்களது மகன் முத்துபிரசாந்த் (26). இவா்கள் வெள்ளக்கோவில் மு.பழனிசாமி நகரில் வசித்து வருகின்றனா். பி.இ. முடித்துள்ள முத்துபிரசாந்த் சென்னையில் ஜ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், மனநிலை பாதிப்புக்குள்ளான அவா் கடந்த சில மாதங்களாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளாா்.
விடுமுறைக்கு அண்மையில் வீட்டுக்கு வந்த முத்துபிரசாந்த் மாத்திரை சாப்பிடாமல் இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவா் விஷ மாத்திைரையை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தினா் அவரை மீட்டு கரூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

