போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஐ.டி. ஊழியா் தற்கொலை

உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:16 am IST

உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ்மூா்த்தி மகன் கோகுல்பிரசாந்த் (30). ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவரது தாய் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.

நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, கோகுல்பிரசாந்த் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.