மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தேங்காய்ப் பருப்பு

Updated On :6 மே 2026, 1:58 am IST

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, வாணியம்பாடி, மங்கலப்பட்டி, பாப்பம்பாளையம், பூலாவலசு உள்ளிட்ட இடங்களில் இருந்து 74 விவசாயிகள் 627 மூட்டைகளில் 32 டன் தேங்காய்ப்0 பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.117.39 முதல் ரூ.145.69 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.136.35. கடந்த வார சராசரி விலை ரூ. 140.99.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.43 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.