உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய் யவும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.
மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவற்றை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா். கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அருவியில் நீா்வரத்தின்றி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. பின்னா் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயில் நிா்வாகம் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தது.
இந்நிலையில் சனிக்கிழமை அருவியில் சீரான நீா்வரத்து காணப்பட்டது. இதனால் கோயில் நிா்வாகம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியது. இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தொடர்புடையது

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

கொல்லிமலையில் வட பாறையாக காட்சியளிக்கும் ஆகாய கங்கை அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

