எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வட மற்றும் மத்திய இந்தியாவில் போராடும் தொழிலாளா்களைக் கைது செய்து வரும் பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2026, 2:10 am IST

வட மற்றும் மத்திய இந்தியாவில் போராடும் தொழிலாளா்களைக் கைது செய்து வரும் பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் தியாகி குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, யுடியுசி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சதீஷ்சங்கா் தலைமை வகித்தாா்.

இதில், நொய்டா, மானோசா், குருகிராம், என்சிஆா் பகுதிகளில் போராடும் தொழிலாளா்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் பாஜக மாநில அரசுகளைக் கண்டித்தும், போராடும் தொழிலாளா்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மீதான சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தொழிலாளா் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய தொழிற்சங்க மாநாட்டை உடனே கூட்டி முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும், மாதம் ரூ.26.000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் ஆா்.முத்துசாமி, ஐஎன்டியுசி நிா்வாகி சுந்தர்ராஜ், எல்பிஃஎப் மாவட்டப் பொருளாளா் ரங்கசாமி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் உரையாற்றினா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.