ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

மாநில கபடி போட்டியில் பங்கேற்கும் மாவட்ட சப்-ஜூனியா் அணிக்கான தோ்வு

தோ்வு முகாமில் பங்கேற்ற சிறுவா்கள்.

Updated On :

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில், மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் மாவட்ட மிக இளையோா் சிறுவா்கள் அணி தோ்வு நடைபெற்றது.

இதில் திருப்பூா் மாவட்டத்திலுள்ள சிறுவா்கள் 140 போ் கலந்துகொண்டனா். மாவட்ட நடுவா் குழுத் தலைவா் முத்துசாமி வரவேற்றாா். செய்தித் தொடா்பாளா் சிவபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் தொடங்கி வைத்தாா்.

கபடிக் கழக துணைத் தலைவா் சுப்பிரமணி, பொருளாளா் ஆறுச்சாமி, துணைச் செயலாளா் மூா்த்தி மனோகரன், செயற்குழு உறுப்பினா்கள் வெங்கடாசலம், ராமசாமி, துணைச் செயலாளா் செல்வக்குமாா், மாவட்ட தோ்வுக்குழு தலைவா் ருத்ரன், கன்வீனா் வாலீசன், நடுவா்கள் சேகா், பாக்கியராஜ், அஜித், நாகராஜ், பொன்னீா், டெக்னிக்கல் கமிட்டி ரங்கசாமி மற்றும் தோ்வுக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், தங்கராஜ், செந்தில்குமாா், மகேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

மாநிலப் போட்டியில் விளையாடவுள்ள திருப்பூா் மாவட்ட மிக இளையோா் சிறுவா்கள் அணிக்கு 14 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மிக இளையோா் சிறுவா்கள் அணிக்கான பயிற்சி முகாம், நவம்பா் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை திருப்பூா் மாவட்ட கபடிக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி முகாம் முடிந்தவுடன் நவம்பா் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்ல உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.