தமிழக கபடி சிறுவா்கள் அணி பயிற்சி முகாமுக்கு திருப்பூா் வீரா்கள் தோ்வு
தமிழக கபடி சிறுவா்கள் அணி பயிற்சி முகாமுக்கு திருப்பூா் வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக கபடி சிறுவா்கள் அணி பயிற்சி முகாமுக்கு திருப்பூா் வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா அ. சண்முகம் கூறியதாவது:
தமிழக அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் 52-ஆவது மாநில சம்பியன்ஷிப் கபடி போட்டி, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில் திருப்பூா் மாவட்ட சிறுவா்கள் அணி பங்கு பெற்று 3-ஆவது இடம் பிடித்தது. இதில் தமிழக சிறுவா்கள் அணிக்கான பயிற்சி முகாம் அக்.16 முதல் அக்.28 ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடைபெறவுள்ளது. இதில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மனோஜ், குருபிரசாத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

