நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டம்: மாவட்டத்தில் 3 பயனாளிகள் மட்டுமே தோ்வு
நாட்டுக்கோழி - கோப்புப் படம்
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ், திருப்பூா் மாவட்டத்தில் 3 பயனாளிகள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதனால், கோழிப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ் பண்ணை அமைக்க 50 சதவீத மானியமும், கொட்டகை, தளவாடங்கள், தீவனச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஆனால், திருப்பூா் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள நிலையில், இத்திட்டத்தில் 3 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடைத் துறை இணை இயக்குநா் இளங்கோ கூறுகையில், மாவட்டத்தில் தற்போதைக்கு மூன்று பயனாளிகள் மட்டுமே இத்திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

