FOLLOW US

ON GOOGLE DISCOVER

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 7% பேருக்கு மட்டுமே வேலை!

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேலை பெற்றோர் குறித்து...

PMKVY records just 7% placement rate

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 7% பேருக்கு மட்டுமே வேலை - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 7:06 am IST

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் 7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (PMKVY), 2015-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, தொழிற்துறைக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டத்தின் (ஆகஸ்ட் மாத நிலவரப்படி) மூலம் பயிற்சி பெற்ற 28.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் 2 லட்சம் பேர் (7.73%) மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பயிற்சிக் காலத்திலேயே கணிசமான அளவில் பயிற்சி பெறுபவர்கள் விலகுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்த 35.4 லட்சம் விண்ணப்பதாரர்களில் சுமார் 6.83 லட்சம் பேர் (19%) பயிற்சிக் காலத்திலேயே விலகியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களைவிட, பயிற்சிக் காலத்தில் விலகியவர்களின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

விண்ணப்பித்து, பயிற்சி பெற்றவர்களுக்கு தொலைத் தொடர்புத் துறையில் (17.5%) அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து கைவினைத் துறை (14.4%), ஜவுளித் துறையும் (13.3%) வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

Summary

PMKVY records just 7% placement rate, highlighting India’s skilling-employment gap

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.