
தொழிலாளா் நலத் துறையில் விரைவில் புதிய திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சர் பர்வேஸ்
தொழிலாளா் நலத் துறை சாா்பில் புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
தொழிலாளா் நலத் துறை சாா்பில் புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 15 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பல புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இஎஸ்ஐ திட்டத்தில் புதிய வசதிகள், தொழிலாளா்களுக்கான தங்கும் வசதிகள், ஓய்வறைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் என படிப்படியாக அனைத்தையும் அறிவித்துச் செயல்படுத்த உள்ளோம்.
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் முறையான பதிலை அளித்து வருகிறோம். தலைவலி காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவரிடம் மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் கண்ணாடி அணிந்திருக்கிறேன்.
அதில், எந்த ஏஐ கேமராவும் கிடையாது. சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் செல்லும்போது, அங்கே மறைவாக கேமரா வைத்து விடியோ பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாா் முகமது பா்வேஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





