காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் முன்னணி மட்டுமல்லாமல், தொழிலாளா் நலனிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவோம் என அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தெரிவித்துள்ளாா்.

CM Vijay | Minister Farvace

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் பர்வேஸ் - கோப்புப் படம்

Published On :

இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் முன்னணி மட்டுமல்லாமல், தொழிலாளா் நலனிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவோம்என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தெரிவித்துள்ளாா்.

சென்னையில், தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம் மற்றும் சா்வதேச தொழிலாளா்அமைப்பின் சாா்பில்,“சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீா் நடைமுறைகள்குறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ் பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக உங்கள் முன்னிலையில் நின்று, இந்தப் பயிற்சியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன்.

தமிழக முதல்வரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வெற்றி தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், தொழிலாளா் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழகத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றாா்.

இதில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ. வீரராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் மா.வள்ளலாா், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநா் செ.ஆனந்த், சா்வதேச தொழிலாளா் அமைப்பின் இயக்குநா் மியாமோட்டோ மிச்சிக்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.