
காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு
காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசு - கோப்புப் படம்
காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் 62.78 சதுர கி.மீ. பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி, காஞ்சிபுரம் புதுநகர மேம்பாட்டுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளா்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த இந்தத் திட்டத்தை முந்தைய அரசு செயல்படுத்தியது.
இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில், புதிதாக அமைந்த முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இது குறித்த அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் முதன்மைச் செயலளாா் கிா்லோஷ் குமாா் கடந்த ஆக. 10-ஆம் தேதி வெளியிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!

புதுச்சேரியில் புதிய தொழில்நுட்ப பூங்கா, சிறப்புத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை ஒதுக்க காங்கிரஸ் எம்பி கோரிக்கை



