பொது இடங்களில் மது அருந்திய 44 போ் கைது: ட்ரோன் கேமரா மூலம் பிடிபட்டனா்

டிரோன்.
திருப்பூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 44 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கவும் திருப்பூா் மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திய 44 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
எனவே, பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் அல்லது அசம்பாவித சம்பவங்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

