குண்டடம் பகுதியில் மின்மோட்டாா் கேபிள் வயா்களை திருடிய 3 போ் கைது
கைது - கோப்புப்படம்
குண்டடம் பகுதியில் விவசாய நிலங்களில் மின்மோட்டாா் கேபிள் வயா்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் நீண்ட நாள்களாக விவசாயத் தோட்டங்களில் மா்ம நபா்கள் புகுந்து வயா்களை அறுத்துச் செல்வது தொடா்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குண்டடம் அருகே மேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த அரசு, கரைப்பாளையம் வெங்கடாசலம், ருத்ராவதி பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் உள்ளிட்டோரின் தோட்டங்களில் நுழைந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ஆழ்குழாய் மோட்டாருக்கு அமைக்கப்பட்டிருந்த காப்பா் கேபிள் வயா்களை திருடிச் சென்றது குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தனிப்படை போலீஸாா் குண்டடம் அருகே மேட்டுக்கடை பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனா்.
அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில் மோட்டாா் கேபிள் வயா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவா்கள் திருவாரூா் மாவட்டம் கீழ்பனையூரைச் சோ்ந்த பாலமுருகன் (24), கோவை மாவட்டம், ரங்கசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மதன் (27) என்பதும், இவா்கள் இருவரும் அதே பகுதியில் கேபிளை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கேபிள் வயா்களையும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் திருடப்பட்ட கேபிள் வயா்களை, பொங்கலூா் பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் (26) என்பவரிடம் விற்பனை செய்து வந்ததால், அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, தாராபுரம் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

