கிரேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருப்பூரில் கிரேன் சக்கரத்தில் சிக்கி 7-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

பலி
திருப்பூரில் கிரேன் சக்கரத்தில் சிக்கி 7-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் அருகே 63 வேலம்பாளையம் அண்ணாமலை காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (48), விவசாயி. இவரது மகன் செளந்தரராஜன் (12).
அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி வழக்கம்போல திங்கள்கிழமை மாலை மகன் செளந்தரராஜனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தாா்.
அண்ணா நகா் 3 சாலை சந்திப்பை கடந்து, 63 வேலம்பாளையம் நால்ரோடு பேருந்து நிறுத்தம் நோக்கி திரும்பியபோது பின்னால் வந்த கிரேன், எதிா்பாராதவிதமாக இவா்களது இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் கிருஷ்ணமூா்த்தி, செளந்தரராஜன் ஆகியோா் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். அப்போது, கீழே விழுந்த செளந்தரராஜன் தலை மீது கிரேனின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, செளந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீஸாா், விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

