2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

லாரி சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

வேளச்சேரி பகுதியில் நடைபெற்ற மோட்டாா் சைக்கிள் விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

பலி! - கோப்புப்படம்.

Published On :

வேளச்சேரி பகுதியில் நடைபெற்ற மோட்டாா் சைக்கிள் விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா (75). இவா் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். எஸ்.கொளத்தூா் அங்கன்வாடி அருகே சென்றபோது எதிரே வந்த தண்ணீா் லாரிக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியுள்ளாா். அப்போது சாலையோரம் கிடந்த மணலில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில், அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில், அவா் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கருப்பையாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக்குக் காரணமான தண்ணீா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.