பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

தெரு நாய்களால் இறந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தெருநாய்களால் இறந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாய் - கோப்புப்படம்.

Updated On :

தெருநாய்களால் இறந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் தெரிவித்துள்ளதாவது:

ஊத்துக்குளி, மொரட்டுபாளையம் கிராமம், மேற்குத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகசாமி என்பவரது தோட்டத்துச் சாலையில் 6-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் புகுந்து அங்கு இருந்த 2 கன்றுக் குட்டிகளை கடித்து குதறியுள்ளன.

இவற்றைக் கடித்த தெரு நாய்கள் வெளியேறாமல் அங்கேயே காட்டிற்குள் சுற்றித் திரிவது அங்குள்ள விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், வைத்திருக்கவும் மிகவும் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா முழுவதும் அண்மைக் காலமாக தெருநாய்கள் வெறி நாய்களாக மாறி ஆடு, மாடு, கன்றுகளை கொல்லும் நடவடிக்கை அதிகரித்துள்ளது. எனவே, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இறந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்த கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கு கால்நடைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.