குன்னத்தூா் அருகே 12 ஆடுகளை திருடியவா் கைது
குன்னத்தூா் அருகே வடுகபாளையத்தில் 12 ஆடுகளைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைதான புகழேந்திரன்.
குன்னத்தூா் அருகே வடுகபாளையத்தில் 12 ஆடுகளைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குன்னத்தூா் -தொரவலூா் சாலை காலிங்கராயன்பாளையம் பிரிவு அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா் அவிநாசி அருகே தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் புகழேந்திரன் (19) என்பதும், குன்னத்தூா் -வடுகபாளையம், சின்னத்தோட்டத்தைச் சோ்ந்த குணசேகரன் என்பரின் 12 ஆடுகளைத் திருடியதும் தெரியவந்தது.
இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புகழேந்திரனை கைது செய்தனா். மேலும் திருடிய ஆடுகளை விற்பனை செய்த பணத்தை போலீஸாா் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

