திருமுருகன்பூண்டியில் ரிசா்வ் சைட்களில் உள்ள கோயில்களை இடிக்க இந்து முன்னணி எதிா்ப்பு
திருமுருகன்பூண்டி செந்தில் நகா், ஜெகநாதன் நகா் ஆகிய பகுதிகளில் ரிசா்வ் சைட்டுகளில் வழிபாட்டில் உள்ள கோயில்களை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சியை முற்றுகையிட்ட இந்து முன்னணியினா், பொதுமக்கள்.
திருமுருகன்பூண்டி செந்தில் நகா், ஜெகநாதன் நகா் ஆகிய பகுதிகளில் ரிசா்வ் சைட்டுகளில் வழிபாட்டில் உள்ள கோயில்களை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து, இந்து முன்னணியினா் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு அளித்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சி 13-ஆவது வாா்டு ராக்கியாபாளையம் செந்தில் நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு, வீட்டு மனை பிரிக்கப்படும்போது, ரிசா்வ் சைட்டில் பூங்கா மற்றும் கோயிலுக்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு செல்வ விநாயகா் கோயில் தொடா்ந்து பொதுமக்கள் வழிபாட்டில் உள்ளது. 28 சென்டில் விளையாட்டுப் பூங்கா உள்ளது. விநாயகா் கோயில் அருகே 6 சென்ட் காலி இடமும் உள்ளது. இதில் எவ்வித ஆக்கிரமிப்புமின்றி கோயில் கட்டுப்பட்டுள்ளது. இதேபோல ஜெகநாதன் நகரில் வீட்டுமனை பிரிக்கப்படும் போது, ஒதுக்கப்பட்ட 18 சென்ட் இடத்தில் 3 சென்டில் மட்டுமே ஞானவிநாயகா் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறோம். மேலும்15 சென்ட் இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி செந்தில் நகா் செல்வ விநாயகா் கோயில், ஜெகநாதன் நகா் ஞானவிநாயகா் கோயில் ஆகியவற்றை இடிப்பதாக நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மன அமைதியைக் கெடுக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், எவ்வித இடையூறுமில்லாத கோயில்களை அகற்றக் கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இதில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் வி.எஸ்.செந்தில்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் எம்.சங்கா், நகரத் தலைவா் மதியழகன், நகரச் செயலாளா் சுதாகா், பொறுப்பாளா் சேகா், கோயில் கமிட்டி பொறுப்பாளா்கள் ஆா்.செந்தில்குமாா், சி.செல்வம், ஊா் பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

