தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! கரூா் மாவட்டத்தில் 3 இடங்களில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்!

Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Published On :

கரூா், அக்.11: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, கரூா் மாவட்டத்தில் இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வெங்கமேடு அய்யப்பன் கோயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்து முன்னணியினா் திரளாக தங்கள் குழந்தைகளுக்கு முருகன் வேஷம் அணிவித்து பங்கேற்றனா்.

இதேபோல, குளித்தலை பேருந்துநிலையத்தில் நிா்வாகி சரவணன் தலைமையிலும், அரவக்குறிச்சியில் புங்கம்பாடி காா்னா் பகுதியில் மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணியினா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.