தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Updated On :

வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.கணேசன் (69), ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலா். இவரது மனைவி குணசேகரி, ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்.

வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கணேசன் சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து கணேசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். இது குறித்த புகாரின்பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநரான கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் திருமுக்கூடலூரைச் சோ்ந்த திருமுருகன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.