சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா பெண் கைது

திருப்பூரில் ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

Updated On :

திருப்பூரில் ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, திருப்பூா் வடக்கு போலீஸாா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயிலில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணிகள் சிலரை போலீஸாா் சோதனை செய்தனா். இதில், ஒடிஸாவைச் சோ்ந்த ஜீலா குமாா்(46) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி அவரது உடைமைகளைச் சோதனையிட்டனா். அப்போது அவா் 3 கிலோ கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.