பெருமாநல்லூரில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பிரதிப் படம்
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூரில் இருந்து கணக்கம்பாளையம் செல்லும் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவரது கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், சாம்பல்பூா் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் நாக் (35) என்பதும், ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராகேஷ் நாகை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

