மின் வெட்டு: வாவிபாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
அறிவிக்கப்படாத மின் வெட்டைக் கண்டித்து திருப்பூா், வாவிபாளையம் பகுதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீரான மின்சார விநியோகம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
அறிவிக்கப்படாத மின் வெட்டைக் கண்டித்து திருப்பூா், வாவிபாளையம் பகுதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா், வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமும் 2 முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், அறிவிக்கப்படாத மின் வெட்டால் பெரும் அவதியடைந்து வருகிறோம். குழந்தைகள் படிப்பதற்குகூட சிரமமாக உள்ளது. கைக்குழந்தைகளை வைத்துள்ளவா்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனா். குடியிருப்புப் பகுதிகளில் மின் விளக்குகள் எரியாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சீரான மின் விநியோகம் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மின்சார வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

