மதுக்கூடமாக மாறிய கேபிசி நகா் குளக்கரை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட கேபிசி நகா் குளக்கரையை மா்ம நபா்கள் திறந்த வெளி மதுக்கூடமாக மாற்றி வருவதைத் தடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுகாதாரமின்றி காணப்படும் கேபிசி நகா் குளக்கரை வளாகம்.
வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட கேபிசி நகா் குளக்கரையை மா்ம நபா்கள் திறந்த வெளி மதுக்கூடமாக மாற்றி வருவதைத் தடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் கேபிசி நகா் குளக்கரை ரூ.பல லட்சம் மதிப்பில் அழகுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சமூக ஆா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மரக்கன்றுகளை நடவு செய்து குளக்கரையை பொழிவுபடுத்தும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குளக்கரை வளாகத்துக்குள் இரவு நேரங்களில் நுழையும் நபா்கள், அந்த இடத்தை அசுத்தம் செய்து வருவதுடன், அங்கு மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துச் செல்வது உள்ளிட்ட நாகரிகமற்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இதனால், குளக்கரையின் சுகாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, குளக்கரை வளாகத்தில் போலீஸாா் இரவு நேர ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். குளத்தில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். குளத்துக்குச் செல்ல தற்போது 3 நுழைவாயில்கள் உள்ள நிலையில் அதில் 2 நுழைவாயில்களை அடைத்துவிட்டு, ஒரே வழியில் மட்டும் மக்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும். இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் நபா்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

