இலைந்தைகுளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள இலைந்தைகுளம் கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள இலைந்தைகுளம் கிராமத்தில் அம்மன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள இலைந்தைகுளம் கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்புவனம் பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் இலைந்தைகுளம் கிராமத்தில் அம்மன் கோவில் தெருவில் மழைநீா் குளம்போல தேங்கியது. இந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து இலைந்தைகுளம் ஊராட்சி தனி அலுவலரிடம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நோய் தொற்று ஏற்படும் முன் இந்த மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

