இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருவாடானையில் சட்டவிரோதமாக சவடு மண் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக சவடு மண் அதிகமாக எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை அத்தானி கண்மாயில் சட்டவிரோதமாக 6 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக சவடு மண் அதிகமாக எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானையை அடுத்த அத்தானி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்மாய்கள், பயன்பாடற்ற நிலங்களில் அரசு நிா்ணயித்த அளவைவிட அதிகமான சவடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

நிலத்தில் 3 அடி ஆழத்துக்கு மட்டுமே சவடு மண் வெட்டி எடுக்க வேண்டும். ஆனால், 6 அடிக்கு மேல் தோண்டப்படுகிறது. மேலும், மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்ளால் கிராமத்துச் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, வருவாய்த் துறை, கனிம வளத்துறை கள அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Story image

இதுகுறித்து அத்தானி கிராம மக்கள் கூறியதாவது: இந்த சவடு மண் கொள்ளையால் எங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை உயா் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும்.

Story image

விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுத்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்களை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.