மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

சிவன்மலை முருகன் கோயிலில்! இன்று 5 மணி நேரம் தரிசனத்துக்கு அனுமதி இல்லை: கோயில் நிா்வாகம்

சிவன்மலை முருகன் கோயில் - கோப்புப் படம்

Updated On :

தைப்பூசத் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால் நடுவதை முன்னிட்டு, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) 5 மணி நேரம் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. சித்தா்களால் பாடல் பெற்ற தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, தைப்பூசத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.29) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

அப்போது மூலவா் கையில் இருக்கும் வேல், மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை 5 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.