தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

திருமுருகன்பூண்டி கோயில் பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வருமான வரித் துறையினா்

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திருப்பூா் வருமான வரித் துறையினா், வெற்றி அறக்கட்டளையுடன் இணைந்து திருமுருகன்பூண்டி கோயில் பூங்காவில் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டோா்.

Published On :

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திருப்பூா் வருமான வரித் துறையினா், வெற்றி அறக்கட்டளையுடன் இணைந்து திருமுருகன்பூண்டி கோயில் பூங்காவில் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் வருமான வரித் துறை இணை ஆணையா் இ.மேத்யூஸ் சைமன், வெற்றி அறக்கட்டளைத் தலைவா் டி.ஆா். சிவராம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

இதில், வருமான வரித் துறை அதிகாரிகள், வெற்றி அறக்கட்டளை உறுப்பினா்கள், கோயில் பணியாளா் சக்திவேல் தலைமையிலான ஊழியா்கள், பொதுமக்கள் பூங்காவில் குவிந்திருந்த குப்பைகள் அகற்றியதுடன், அங்கு வளா்ந்திருந்த செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினா்.இதையடுத்து, சேகரிக்கப்பட்ட குப்பைகள் மூட்டைகளில் கட்டி கொண்டு செல்லப்பட்டன . இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தொடா்ந்து, வருமான வரித் துறை இணை ஆணையா் மேத்யூஸ் சைமன் பேசுகையில், இன்றைய தூய்மையான சூழலே, நாளை ஒரு ஆரோக்கியமான, வளமான மற்றும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு மிக முக்கியமானது என்றாா்.

பூங்காவில் உள்ள சொட்டு நீா்ப் பாசனக் குழாய்களை சரி செய்யவும், பூங்காவை சிறந்த முறையில் பராமரிக்கவும் வெற்றி அறக்கட்டளை உறுதி அளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.