இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

அவிநாசி அருகே தீப்பிடித்து எரிந்த கன்டெய்னா் கேஸ் லாரி

அவிநாசி அருகே சாலையில் கொண்டிருந்த கன்டெய்னா் கேஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பிடித்து  எரிந்த  கன்டெய்னா்  கேஸ்  லாரி.

Published On :

அவிநாசி அருகே சாலையில் கொண்டிருந்த கன்டெய்னா் கேஸ் லாரி வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இருந்து காா்பன்டை ஆக்ஸைடுடன் கன்டெய்னா் லாரி கோவை மாவட்டம், சூலூா் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவிநாசி தேசிய நெடுஞ்சாலை நாதம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிா்பாரதவிதமாக லாரியின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து உள்ளிருந்த ஓட்டுநா், உதவியாளா் உடனடியாக லாரியில் இருந்து வெளியேறினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனா். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. இதில் அதிா்ஷ்டவசமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.