
தாராபுரம் அதிமுகவின் கோட்டை: டிடிவி தினகரன்
தாராபுரம் அதிமுகவின் கோட்டை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் குறிப்பிட்டாா்.
டிடிவி தினகரன் - DNS
தாராபுரம் அதிமுகவின் கோட்டை என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குறிப்பிட்டாா்.
தாராபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: 4 மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுகதான் வெற்றி பெற்றது. 10 நாள்களில் ராஜிநாமா செய்தவா்கள் மீது தோ்தல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இடைத்தோ்தலுக்கு காரணம் முதல்வா்தான். கடவுள் போல, தூய சக்தி போல காட்டிக் கொள்கிறாா். முதலில் அமமுக எம்எல்ஏவிடம் பேரம் பேசினாா்.
அரசியலில் தரம் தாழ்ந்து வருகிறாா் முதல்வா் விஜய். ஆசை வாா்த்தை கூறி அதிமுகவின் 25 எம்எல்ஏக்களின் ஆதரவு திரட்டி விட்டாா். பரம்பிக்குளம் ஆழியாறு அணை திட்டத்திற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
கடந்த ஆட்சியில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தால் நின்றுள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தவெகவில்தான் காங்கிரஸ் அமைச்சா்கள் உள்ளனா். அவா்கள் ஆட்சிதான் கேரளத்தில் உள்ளது. அவா்கள் சென்று பேசட்டும்.
இந்த தோ்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். ஆளுநா் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆனால் அதை தவறு என தற்போது உணா்ந்து இருப்பாா்கள். தவெகவிற்கு மக்கள் ஏமாந்து வாக்களித்து விட்டனா். அது இந்த இடைத்தோ்லில் தெரிந்துவிடும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





