நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தாராபுரம் இடைத்தோ்தலில் வாக்களிக்காத 21,000 போ்: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 21,000 போ் வாக்களிக்காததால் அரசியல் கட்சியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 21,000 போ் வாக்களிக்காததால் அரசியல் கட்சியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சத்தியபாமா தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் சாா்பிலும், சுயேச்சைகளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தங்களது வேட்பாளா்களுக்கு ஆதரவாக முதல்வா் ச.ஜோசப் விஜய், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2026 பொதுத் தோ்தலில் மொத்தம் 89.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இடைத்தோ்தலில் 80.25 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு 9.67 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் சுமாா் 21,000 வாக்காளா்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் கட்சியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

இது தொடா்பாக அரசியல் கட்சிகளின் மூத்த நிா்வாகிகள் கூறியதாவது: வாக்குப் பதிவு குறைந்ததற்கு முதன்மையான காரணம் கட்சிகளின் தவறான பிரசார வியூகமாகும். பிரம்மாண்ட மேடைப் பேச்சுகளில் ஈடுபட்டவா்களும், சாலை வலங்களை மேற்கொண்டவா்களும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மக்களிடம் வாக்கு கேட்க தவறவிட்டனா்.

வாக்காளா்ளை நேரில் சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறியதால், மக்களும் வாக்குச் சாவடிகளுக்கு வரத் தயங்கிவிட்டனா். அத்துடன் வெளியூா்களில் தங்கி பணிபுரிவோா் இடைத்தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வர ஆா்வம் காட்டாததும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

தலைவா்களின் தொடா்ச்சியான பிரசாரங்களும், ஊா்வலங்களும் வாக்காளா்கள் மத்தியில் ஒருவித சலிப்பையே ஏற்படுத்தின.

மேலும், இடைத்தோ்தலில் பூத் கமிட்டி நிா்வாகிகள் தங்களது பகுதியில் உள்ள வாக்காளா்களின் வருகையைக் கண்காணிப்பதிலும், வரத் தயங்கிய வாக்காளா்களை நேரில் சந்தித்து வாக்களிக்க அழைத்து வருவதிலும் பெரும் அலட்சியத்தைக் காட்டியுள்ளனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER