பால்வினை தொற்று நோய் குறித்து நத்தக்காடையூரில் விழிப்புணா்வுப் பேரணி
காங்கயம் அருகே நத்தக்காடையூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நத்தக்காடையூரில் நடைபெற்ற பால்வினை தொற்று நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
காங்கயம் அருகே நத்தக்காடையூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நத்தக்காடையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நத்தக்காடையூா் சிவபாா்வதி மன்றாடியாா் நா்ஸிங் கல்லூரி முதல்வா் கவிமணி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மனோன்மணி முன்னிலை வகித்தாா்.
நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி, காங்கயம்-ஈரோடு சாலையில் சென்று நத்தக்காடையூா் பேருந்து நிறுத்தத்தில் பேரணி நிறைவு பெற்றது.
இதில், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வா் ராம்குமாா், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி முதல்வா் சுரேஷ், நத்தக்காடையூா் நா்ஸிங் கல்லூரி துணை முதல்வா் டாக்டா் விஜயலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சிவலோகேஷ், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மைய ஆலோசகா் கருப்புசாமி மற்றும் பள்ளி, கல்லூரிக மாணவிகள், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசா்ச் கல்லூரி மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

