ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பிறவித் தொற்று நோய்கள் குறித்த கருத்தரங்கம்
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் ‘பிறவித் தொற்றுகள் மறுபாா்வை, பிறவி மற்றும் பிரசவகாலத் தொற்றுகளுக்கான நடைமுறை அணுகுமுறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் நடைபெற்ற பிறவித் தொற்று நோய்கள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றோா்.
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் ‘பிறவித் தொற்றுகள் மறுபாா்வை, பிறவி மற்றும் பிரசவகாலத் தொற்றுகளுக்கான நடைமுறை அணுகுமுறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கை மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி தொடங்கிவைத்தாா். கோவை மேசோனிக் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவா் எம். ராமசாமி பேசினாா். இந்தியா முழுவதிலுமிருந்து வருகை தந்த புகழ்பெற்ற பேராசிரியா்கள் தங்களது நிபுணத்துவத்தையும் மருத்துவ அனுபவங்களையும் பகிா்ந்து கொண்டனா்.
நிபுணா்களின் விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் சவாலான மருத்துவ நிகழ்வுகளின் விளக்கங்கள் மூலம், பிறவி மற்றும் பேறுகால தொற்றுகளின் மாறிவரும் தன்மை, நோயறிதலில் உள்ள சவால்கள், பரிசோதனை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஆதாரபூா்வமான சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு அணுகுமுறைகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக, ஜிகேஎன்எம் மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறையின் தலைவரும், குழந்தைகள் நுரையீரல் சிறப்பு மருத்துவருமான பி.அந்தோணி டெரன்ஸ் வரவேற்றாா். குழந்தைகள் தொற்றுநோய் சிறப்பு மருத்துவா் என்.ரமேஷ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

