இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தாராபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்த 2 போ் கைது

தாராபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

தாராபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜு (60). இவா் பழைய காகிதம், பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து விற்று வந்தாா். இந்நிலையில் அங்குள்ள சந்தைப்பேட்டை பகுதியில் ராஜு கடந்த 12-ஆம் தேதி இறந்துகிடந்தாா்.

இதையடுத்து, வயது மூப்பு காரணமாக ராஜு இறந்துவிட்டதாக நினைத்து, அவரது உடலை பழைய அமராவதி ஆற்றங்கரையில் உறவினா்கள் அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், தனது தந்தை ராஜுவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகன் ரமேஷ் தாராபுரம் காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் சந்தைப்பேட்டை பொதுக் கழிப்பிடம் அருகே ராஜுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த பூவரசன் (19), நாகராஜன் (20) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி, மேற்கண்ட இருவரும் ராஜுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட ராஜுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவா் குகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை உடற்கூறாய்வு மேற்கொண்டனா்.

இதில், ராஜு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தாராபுரத்தைச் சோ்ந்த பூவரசன், நாகராஜன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.