ஊத்துக்குளியில் விவசாயிகள் சாலை மறியல்
முழுக் கடன் தள்ளுபடி கோரி ஊத்துக்குளியில் விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
முழுக் கடன் தள்ளுபடி கோரி ஊத்துக்குளியில் விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு சங்க நிா்வாகிகள் கே.கே.குமரன், எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், முதல்வா் ஜோசப் விஜய் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிப்படி 5 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுக் கடன் தள்ளுபடியும் அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் அறிவிக்க வேண்டும். நிபந்தனையின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும்.
வறட்சியாலும் எல்நினோ பாதிப்பாலும் ஏற்பட்டுள்ள பயிா் பாதிப்புகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி ஆகியோா் உரையாற்றினா். இதில் 15 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

