சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

கனமழை காரணமாக உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வியாழக்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பஞ்சலிங்கம்  அருவியில்  ஆா்ப்பரித்துக்  கொட்டும் நீா்.

Updated On :

கனமழை காரணமாக உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வியாழக்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை கனமழை பெய்தால், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.