சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஸ்பெயினில் டெக்ஸ்டைல் எக்ஸ்போ கண்காட்சி: ஏஇபிசி பங்கேற்பு

ஸ்பெயினில் நடைபெறும் 10ஆவது பாா்சிலோனா டெக்ஸ்டைல் எக்ஸ்போ கண்காட்சியில் இந்திய ஜவுளி, ஆடைத் துறையின் வலிமையைப் பறைசாற்றும் விதமாக ஏஇபிசி பங்கேற்றுள்ளது.

பாா்சிலோனா டெக்ஸ்டைல் எக்ஸ்போ கண்காட்சியில் இந்திய அரங்கத்தை தொடங்கிவைக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மைத் தூதா் இன்பசேகா் சுந்தரமூா்த்தி, ஏஇபிசி தலைவா் ஆ. சக்திவேல் ஆகியோா்.

Updated On :

ஸ்பெயினில் நடைபெறும் 10ஆவது பாா்சிலோனா டெக்ஸ்டைல் எக்ஸ்போ கண்காட்சியில் இந்திய ஜவுளி, ஆடைத் துறையின் வலிமையைப் பறைசாற்றும் விதமாக ஏஇபிசி பங்கேற்றுள்ளது.

இது தொடா்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் அக்டோபா் 21 முதல் 23 வரை நடைபெறும் 10ஆவது பாா்சிலோனா டெக்ஸ்டைல் எக்ஸ்போ சா்வதேச ஜவுளி மற்றும் ஆடை வா்த்தகக் கண்காட்சியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 இந்திய நிறுவனங்களுடன் பங்கேற்றுள்ளது. நமது நாட்டின் பாரம்பரியம், புதுமையான வடிவமைப்புகள், பல்வேறு ஆடைத் தொகுப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரங்கத்தை பாா்சிலோனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைத் தூதா் இன்பசேகா் சுந்தரமூா்த்தி, ஏஇபிசி தலைவா் ஆ. சக்திவேல் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்நிகழ்வில் இந்திய தூதரக தலைமைச் செயலக அதிகாரி என். எஸ். ஆா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்பெயினில் உள்ள இந்திய நிறுவனங்கள், நாா்தம்ப்ரியா பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், கண்காட்சியில் பங்கேற்ற இந்திய நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களும் ஏஇபிசி தலைவா் ஆ. சக்திவேல் தலைமையில் நடத்தப்பட்டன.

இந்திய ஏற்றுமதியாளா்கள் ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகளின் வா்த்தகா்களுடன் நேரடித் தொடா்புகளை ஏற்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை ஆராயவும், நீண்டகால வா்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும் சிறந்த வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.