
அமராவதி ஆற்றில் 3,000 கனஅடி தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
அமராவதி ஆற்றில் குடிநீா் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை 3,000 கனஅடியாக உயா்த்த வலியுறுத்தி, வெள்ளக்கோவில் புதுப்பை மற்றும் அக்கரைப்பாளையம் ஆற்றுப்பாலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுப்பை அமராவதி ஆற்றுப்பாலத்தில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.
அமராவதி ஆற்றில் குடிநீா் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை 3,000 கனஅடியாக உயா்த்த வலியுறுத்தி, வெள்ளக்கோவில் புதுப்பை மற்றும் அக்கரைப்பாளையம் ஆற்றுப்பாலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தற்போது அமராவதி ஆற்றில் 1,000 கனஅடி தண்ணீா் மட்டுமே திறக்கப்படுகிறது. திருப்பூா் மாவட்டம் வழியாக கரூா் மாவட்டம் வரை செல்ல வேண்டிய இந்த நீா், குறைந்த அளவில் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்குச் சென்று சேராது. இதனால் பல பகுதி பொதுமக்கள் குடிநீா் பற்றாக்குறை, விவசாயிகள் பாசன நீா் பற்றாக்குறையாலும் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள்.
இதனைக் கண்டித்தும், தண்ணீரின் அளவை உடனடியாக அதிகரிக்கக் கோரியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திமுக திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், வெள்ளக்கோவில் ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், நகரச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் தமிழக அரசு உடனடியாக கூடுதல் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





