உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

176 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 176 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :5 செப்டம்பர் 2026, 1:17 am IST

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 176 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள தெக்கலூா் வடுகபாளையம் பிரிவு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மூட்டையுடன் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் 176 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள வாகராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராகுல் டிராவிட் (27) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராகுல் டிராவிட்டை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 176 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.