ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

விற்பனைக்காக பதுக்கப்பட்ட 149 கிலோ புகையிலை பொருள்களுடன் இருவா் கைது

விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 140 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை குன்னூா் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா்.

Updated On :

விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 140 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருள்களை குன்னூா் போலீஸாா் பறிமுதல்  செய்து இருவரை கைது செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள பா்லியாறு பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை  பொருள்கள் விற்பனைக்கு எடுத்து வருவதாக குன்னூா் சிறப்பு தனிப் பிரிவு  போலீஸாருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து குன்னூா் காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜெயராஜ் ஆகியோா் தலைமையில் பா்லியாறு பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் (28), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரபத்ரன் (31) என்பதும், அவா்கள் வைத்திருந்த பையில்  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்ததும் தெரியவந்தது. அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் கோவைக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 140 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இருவரையும்மகைது செய்து  குன்னூா் சாா்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.