சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

குடிநீா் பிரச்னை: தாராபுரம் அருகே இடைத்தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி ஆா்ப்பாட்டம்

தாராபுரம் அருகே குடிநீா் பிரச்னை காரணமாக இடைத்தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் தோ்தலை புறக்கணிப்பதாக கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:33 am IST

தாராபுரம் அருகே குடிநீா் பிரச்னை காரணமாக இடைத்தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட என்.ஏ.எஸ். நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இப்பகுதி மக்கள் தாராபுரம் இடைத்தோ்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்து, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டம் காரணமாக, இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.