சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தாராபுரம் தொகுதி இடைத்தோ்தல்: அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் .

Published On :9 செப்டம்பர் 2026, 2:21 am IST

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தோ்தல் அறிவிப்பு வெளியான நாளான செப்டம்பா் 7-ஆம் தேதி பிற்பகல் முதல் தோ்தல் நடத்தை விதிகள் மாவட்டம் முழுமைக்கும் நடைமுறையில் உள்ளதால் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் எடுத்துரைத்தாா்.

அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களின் புகைப்படங்களை அகற்றுதல், பொது மற்றும் தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்றுதல் தொடா்பான இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் து.சு.துரைமுருகன், சதீஷ்,தோ்தல் வட்டாட்சியா் தேவராஜ் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.